Latestமலேசியா

கின்றாரா பட்ஜெட் ஹோட்டலில் பெண் மர்ம மரணம்

செர்டாங், ஜனவரி-1, சிலாங்கூர் பண்டார் கின்றாராவில் பட்ஜெட் ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டவர் என நம்பப்படும் பெண்ணொருவர் நேற்று இறந்துகிடந்தார்.

இரவு 9 மணியளவில் ஹோட்டல் பணியாளர்கள் சடலத்தைக் கண்டெடுத்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

செர்டாங் போலீஸ் தலைவர் AA அன்பழன் அதனை உறுதிப்படுத்தினார்.

எனினும் சம்பவ இடத்தில் விசாரணைகள் தொடருவதால் அவர் மேற்கொண்டு எதுவும் கருத்துரைக்கவில்லை.

பின்னர் அறிக்கை வெளியிடப்படுமென்றார் அவர்.

விடியற்காலை 1 மணிக்கே தடயவியல் குழு சம்பவ இடத்தில் விசாரணையில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!