Latestமலேசியா

கிள்ளானில் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே சண்டை; வைரலான காணொளி

கிள்ளான், ஜூலை 2 – கிள்ளான் மேரு, Jalan Meranti Suteraவில்
உள்ள நாசி கண்டார் உணவகத்தின் பின்புற பகுதியில் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கும்பல் ஒன்று சண்டையிடும் 22 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இதனிடையே இச்சண்டையில் ஈடுபட்டவர்கள் மேரு வட்டாரத்திலுள்ள இடைநிலைப் பள்ளியைச் சேர்த்த சில மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் S விஜய ராவ் ( Vijaya Rao ) தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இதுவரை எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் போலீஸ் புகார்கள் பெறாத நிலையில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயத்தையும் போலீஸ் கடுமையாக கருதுவதாக விஜயராவ் வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை உறுதிப்படுத்துவதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையற்ற எந்தவொரு ஆருடங்கள் மற்றும் அனுமானங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் பரப்பக்கூடாது என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் திரையில் காணும் (03-3392-2222)
எண்களில் மேரு போலீஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளும்படி விஜயராவ் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!