
ஷா அலாம், மார்ச் 27 – கிள்ளான், கம்போங் புக்கிட் ஜாத்தி, ஜாலான் புக்கிட் ஜாத்தியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற ஆடவர் நீரில் மூழ்கி மாண்டார். எனினும் அவரது மகன் பொதுமக்கள் உதவியால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த பரிதாபச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.42 அளவில் நிகழ்ந்தாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குனர் அகமட் முக்லிஸ் ( Ahmad Mukhlis) தெரிவித்தார்.
தகவல் கிடைக்கப்பெற்றததை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றபோது தனது 11 வயது மகனுடன் 40வயது ஆடவர் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் , ஆற்றில் விழுந்த மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்ததாகவும் , அவரது மகனை பொதுமக்கள் காப்பாற்றியதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக அகமட் முக்லிஸ் கூறினார். அந்த ஆடவரை உடனடியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை. எனினும் அந்த ஆடவர் காணாமல்போன ஆற்றுப் பகுதியிலிருந்து மூன்று மீட்டர் தொலைவில் இரவு 9 மணியளவில் அவரது சடலம் மீட்கப்பட்டது.