Latestமலேசியா

கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போலீசார் கைப்பற்றிய 3.5 டன் போதைப்பொருள்

கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கிள்ளான் பள்ளதாக்கு (Klang Valley) பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நடவடிக்கைகளில், சுமார் 598.90 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3,586.45 கிலோ கிராம் போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது என்றும் இது மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறியப்படுகின்றது.

செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்பிரிவு நடத்திய சோதனைகளில், கேப்பொங் மற்றும் செலாயாங்கில் நடைபெற்ற நடவடிக்கைகளின் போது 34 முதல் 51 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த போதைப்பொருள் சந்தையை சென்றடைந்திருந்தால் 1.2 கோடியே மேற்பட்ட மக்களை பாதித்திருக்கும் என்று போலீசார் கூறினர்.

குற்றக்கும்பல் கடந்த ஜூலை மாதத்திலிருந்து தொழிற்சாலை வளாகங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை போதைப்பொருள் ஆய்வகங்களாக மாற்றி செயல்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை, மேலும் குறைந்தது 12 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கிப்படுகின்றது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!