Latestமலேசியா

கிள்ளான் மாவட்ட நிலையிலான ஸ்ரீனிவாச ராமானுஜன் கணிதப் போட்டி 2025 சிறப்பாக நடந்தேறியது

கிள்ளான், செப்டம்பர்-29,

2025 ஸ்ரீனிவாச ராமானுஜன் கணிதப் போட்டியின் கிள்ளான் மாவட்ட நிலையிலான சுற்று நேற்று வல்லம்பு ரோசா தோட்டத் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.

Student Skill Development எனும் மாணவர் திறன் மேம்பாட்டு அமைப்பும், சிலாங்கூர் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றமும் இணைந்து, தமிழரசு அவர்களின் ஆலோசனையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மொத்தம் 8 பள்ளிகளில் இருந்து 451 மாணவர்கள் பங்கேற்று, தங்களது கணிதத் திறன், சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.

பங்கேற்ற அனைத்து மாணவர்களும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு நிலைத் தரத்திலும் சிறந்த 30 மாணவர்களுக்கு
பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக GOPIO International பொதுச் செயலாளர் ரவீந்திரன் அருணன் மற்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை மொழி பிரிவு உதவி இயக்குநர் வீ.செங்குட்டுவன் கலந்து கொண்டனர்.

இப்போட்டி மாணவர்களின் கணித ஆற்றலை வெளிப்படுத்தும் களமாக அமைந்ததாக ஏற்பாட்டுக் குழுவினரும் சிறப்பு விருந்தினர்களும் வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்கள், பின்னர் மாநில அளவிலான போட்டியில் தங்கள் பள்ளிகளைப் பிரதிநிதிக்கவுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!