
ஜாகார்த்தா, நவம்பர்-4 – கிழக்கு இந்தோனீசியத் தீவான Flores-சில் உள்ள Lewotobi Laki-Laki எரிமலை நேற்று நள்ளிரவு வெடித்துச் சிதறியதில் குறைந்தது அறுவர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
எரிமலை அடிவாரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் அவர்கள் பலியானதாக கிராமத் தலைவர் கூறினார்.
எரிமலை வெடித்ததால் பதற்றமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே தப்பியோடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
எரிமலை வெடிப்பு குறித்து அதிகாரத் தரப்பிலிருந்து இன்னும் அறிக்கை ஏதும் வரவில்லை.