Latestஇந்தியா

குஜராத்தில் மூதாட்டியின் கண் இமைகளில் 250 பேன்கள்; மருத்துவர்கள் அதிர்ச்சி

அம்ரேலி, நவம்பர்-11,

இந்தியாவின் குஜராத் மாநிலம் அம்ரேலியில் அரிதான மருத்துவ சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

66 வயது மூதாட்டி, கண் இமைகளில் கடுமையான வலி மற்றும் அரிப்பு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பரிசோதனையின் போது, ​​அவரின் கண் இமைகளில் மொத்தம் 250 பேன்களும் 85 ஈர்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், McPherson கருவி மூலம் இரண்டு மணிநேர சிகிச்சையில் பேன்கள் அனைத்தையும் அகற்றினர்.

சிகிச்சைக்கு பிறகு நோயாளி முழுமையாக குணமடைந்துள்ளார்.

இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிது என்றும், தனது 21 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் இதுபோல் இரண்டு முறை மட்டுமே கண்டுள்ளதாகவும் சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்தார்.

phthiriasis palpebrarum எனப்படும் இந்த அரிய வகை பேன் கண் இமைகளின் இரத்தத்தை உறிஞ்சி அரிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும் என மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!