புத்ராஜெயா, செப்டம்பர் -27, Mpox என்றழைக்கப்படும் குரங்கம்மை நோய்க்கான Tecovirimat தடுப்பு மருந்துகளின் கையிருப்பு கிடைக்கப் பெற்றிருப்பதை, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்த அத்தடுப்பு மருந்துகளின் விநியோகத்தில், நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ள 4 குழுவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நாட்பட்ட நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் (Datuk Seri Dr Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
என்றாலும் மருத்துவ நிபுணர்களின் பரிசோதனை மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையிலேயே உரியவர்களுக்கு அத்தடுப்பு மருந்துகள் தரப்படும்.
நாட்டில் ஏற்கனவே 10 சம்பவங்கள் பதிவான நிலையில், ஜூலை 26-ஆம் தேதிக்கு புதியச் சம்பவங்கள் பதிவாகவில்லை.
என்றாலும் முழு கண்காப்பும் விழிப்பு நிலையும் முக்கியமென்றார் அவர்.
அதே சமயம் பொதுமக்களுக்குத் தடுப்பூசித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை Dr சுல்கிஃப்ளி மறுஉறுதிபடுத்தினார்.