
குளுவாங், பிப்ரவரி-15 – ஜோகூர், குளுவாங், மக்கோத்தா roundabout வளைவை வெள்ளை நிற Perodua Axiata கார் நூற்றுக்கணக்கான தடவை சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
‘Double signal’ சமிக்ஞையுடன் அக்கார் roundabout-டை சுற்றி வருவது, வைரலான 57 வினாடி வீடியோவில் தெரிந்தது.
காலையிலிருந்து இரவு வரை அதே roundabout-டை அக்கார் சுற்றி வந்ததாக, நேரில் பார்த்த ஒருவர் வைரலான facebook பதிவின் கீழ் கருத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலைமையைக் கட்டுப்படுத்த கடைசியில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
சில போலீஸ்காரர்கள் அந்த roundabout ஓரமாக போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிச் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததை வீடியோவில் காண முடிந்தது.
தொடர்ந்து சுற்றி வருவதிலிருந்து அக்காரோட்டியை போலீஸார் ஒருவழியாகத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது.
அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Bahrin Mohd Noh கூறினார்.
எனினும், அக்காரோட்டி எதனால் roundabout-டை அத்தனை தடவை சுற்றினார் என்பது உட்பட, மேற்கொண்டு தகவல் எதனையும் போலீஸார் தெரிவிக்கவில்லை.