Latestமலேசியா

குழந்தையை கன்னத்தில் அறைந்து வீக்கம் ஏற்படுத்திய குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட் – ஆக 12 – அழுகையை நிறுத்தத் தவறிய 11 மாத பெண்
குழந்தையின் கன்னத்தில் அறைந்து வீக்கத்தை ஏற்படுத்தியதாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் மீது பத்து பஹாட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆகஸ்டு 6ஆம்தேதியன்று தாமான் செத்தியா ஜெயாவிலுள்ள ஒரு வீட்டில் காலை 9 மணி முதல் மணி மாலை 6 மணிவரை இக்குற்றத்தை புரிந்தாக 58 வயது பெண்ணான இங் லீ புங் ( Ng Lee Fhung ) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

30,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31 (1) ( a) விதியின் கீழ் அந்த பெண்மணி மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. அந்த பெண்ணுக்கு 8,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் செப்டம்பர் 22 ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும். மேலும் புகார்தாரருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதோடு மாதந்தோறும் 1 ஆம்தேதி அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு அவரது கடப்பிதழையும் நீதிமன்றத்தில் சமர்பிக்குக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!