
குவாலா கங்சார், டிசம்பர்-28 – பேராக், குவாலா கங்சாரின் கம்போங் கெலேபோர் (Klebor) பகுதியில் உள்ள டெலிகோம் மலேசியா தொலைத்தொடர்பு கோபுரம் நேற்று மாலை தீப்பற்றி எரிந்தது.
வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையிலிருந்தே தீப்பொறி தென்பட்டது.
மாலை 6.36 மணிக்கு தீயணைப்பு – மீட்புப் படையினர் அழைக்கப்பட்டாலும், தவறான முகவரி வழங்கப்பட்டதாலும், அது காட்டை ஒட்டிய செம்பனை எண்ணெய் தோட்டப் பகுதி என்பதாலும், அவர்கள் சம்பவ இடத்தை அடைய ஒரு மணி நேரம் தாமதமானது.
தீயை, நில உரிமையாளர் தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கொண்டு கட்டுப்படுத்த உதவினார்.
கோபுரத்தின் சில தொடர்பு பலகைகள் சேதமடைந்ததால், மெக்சிஸ் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டன.
தீக்காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



