Latestமலேசியா

குவாலா குபு பாருவில் நீர்பெருக்கு; 12 போலீஸ்காரர்கள் உட்பட 22 பேர் ஆற்றில் சிக்கிக் கொண்டனர்

உலு சிலாங்கூர், செப்டம்பர்-5 – உலு சிலாங்கூர், குவாலா குபு பாருவில் உள்ள Kampung Orang Asli Pertak கிராமத்தில் திடீரென ஆற்றில் ஏற்பட்ட நீர்பெருக்கில், 12 போலீஸ்காரர்கள் உட்பட 22 பேர் சிக்கிக் கொண்டனர்.

எஞ்சியவர்கள் பொது மக்கள் ஆவர்.

நேற்று மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் அங்கு நீர் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

திடீரென கனமழை பெய்து ஆற்றில் நீர்பெருக்கு ஏற்பட்டதில், அவர்கள் அனைவரும் அக்கரையில் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புப் படையினர் பாதுகாப்பு ஜேக்கேட்களையும் கயிறுகளையும் பயன்படுத்தி அனைவரையும் இக்கரைக்குப் பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!