Latestஉலகம்

கூட்டணி கிடையாது; TVK தனித்தே போட்டி – விஜய் அறிவிப்பு

சென்னை, மார்ச்-19-2026 சட்டமன்றத் தேர்தலால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில, எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி என்ற தங்களது கொள்கைகளில் எந்த சமரசமும் இருக்காது என அவர் திட்டவட்டமாக சொன்னார்.

எனவே, பல்வேறு கட்சிகள் கூட்டணி பேரத்துக்கு வந்ததாகவும், அவற்றுடன் TVK பேச்சு நடத்தியதாகவும் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஈராண்டுகளுக்கு முன் கட்சி தொடங்கியதிலிருந்தே ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் கூறியும், எந்தவொரு முக்கியக் கட்சியும் அவர் பக்கம் செல்லவில்லை.

இந்த நிலையில் அடுத்த மாதத் தேர்தலில் TVK தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் கடந்த ஒருவாரமாக திடீரென அதிமுக – பாரதீய ஜனதா தலைமையிலான NDA கூட்டணியில் TVK-வை சேர்க்க பேச்சுவார்த்தை நடப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.

விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜூனாவே, கூட்டணி சேர்ந்தால் TVK-வுக்கு 90 தொகுதிகளும், விஜய்க்கு துணை முதல்வர் பதவியும் தருவதாக பேரம் நடத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவை எல்லாமே வதந்திகள் என்ற ரீதியில் பேசி கூட்டணி பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.

தனித்து களம் காண்பதன் மூலம், முதல் தேர்தலிலேயே தனக்கிருக்கும் மக்கள் செல்வாக்கை வாக்கு விழுக்காடு வாயிலாக நிரூபிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!