Latestமலேசியா

கெசாஸ் நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற ட்ரேய்லர் லாரி; வைரல் வீடியோ குறித்து போலீஸ் விசாரணை

சுபாங் ஜெயா, டிசம்பர்-14 – KESAS நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்றிச் சென்று, பெரும் நெரிசலை ஏற்படுத்திய ட்ரேய்லர் லாரி குறித்து சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் விசாரித்து வருகிறது.

வைரலான அச்சம்பவம் டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் ACP Wan Azlan Wan Mamat கூறினார்.

ஹெகாப்டரின் நீளத்தால் சாலையில் ட்ரேய்லர் பயணிக்க முடியாமல் திணறியதும், இதனால் நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனமோட்டிகளும் அசௌகரியத்துக்கு ஆளானதும் வைரல் வீடியோவில் தெரிந்தது.

அந்த நெரிசலால், ஒரு அம்புலன்ஸ் வண்டியின் பயணமும் தடங்கலைச் சந்தித்தது.

இந்நிலையில் அந்த டிரேய்லர் வாரியின் பதிவு எண்ணை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக Wan Azlan தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீஸ் விசாரணைக்கு உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!