Latestமலேசியா

கெடா Laks Money Cash & Carry-யின் 45ஆம் ஆண்டு கொண்டாட்டமும் இஃப்தார் நோன்புத் துறப்பும்

கெடா, பாலிங், பெக்கான் மாலாவ் பகுதியில், 45 ஆண்டுகளாக வணிகத்தில் பீடுநடை போடுபவர் Laks Money Cash & Carry’ நிறுவனத்தின் தோற்றுனர் Soori Demedu.

ஒரு கண் பார்வை இல்லாவிட்டாலும், உழைப்பை மூதலதனமாக விதைத்து, மகன்களின் துணையுடன் வளர்ச்சியடைந்துள்ளது இந்நிறுவனம்.

குறிப்பாக, Laks Money Sdn Bhd நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி லோகேஷ் ராவ், நிறுவனத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வர்த்தக வெற்றிப் பாதைகளை அமைத்து வருகிறார்.

90 விழுக்காடு மலாய் வாடிக்கையாளர்களின் ஆதரவில், மளிகை பொருட்களை விநியோகம் செய்து, அனைத்து இனத்தவரையும் இக்குடும்பம் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வாண்டு 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஹரி ராயா உதவி பொருட்கள் மற்றும் பண அன்பளிப்பு வழங்கியது Laks Money.

Laks Money Cash & Carry தொடங்கப்பட்டு இது 45-ஆவது நிறைவாண்டு என்பதால், இஃப்தார் நோன்புத் திறப்பு இன்னும் பெரிதாக, கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக, லோகேஷ் ராவ் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

வெறுமனே வணிகம் செய்தோம் பணம் ஈட்டினோம் என்றில்லாமல், சமூகப் பொறுப்பின் அடிப்படையில், மக்களுக்கு எப்படி மீண்டும் கொடுப்பது என்பது வணிகங்களை மேலும் பெரிய வளர்சிப் பாதைக்கு கொண்டுச் செல்லும்.

அதனை நன்கு உணர்ந்து சுய வளர்ச்சியோடு அருகிலுள்ள பள்ளிவாசல்கள், சூராவ்கள், இஸ்லாமியப் பள்ளிகள், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது Laks Money Cash & Carry நிறுவனம்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!