
பெந்தோங், பிப் 24 – கெந்திங் மலையில் வேகமாக ஓட்டிச் சென்ற கார் ஒன்று கவிழ்ந்த சம்பவம் தொடர்பான 12 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தலத்தில் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
27 வயதுடைய அந்த கார் ஓட்டுனர் இச்சம்பவம் குறித்து நேற்று காலை மணி 11.05 அளவில் Goh Tong Jaya போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார் என பெந்தோங் (Bentong) மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
கெந்திங் மலையை நோக்கி அந்த கார் சென்று கொண்டிருந்தபோது 14.7 ஆவது கிலோமீட்டரில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக அந்த ஆடவர் தெரிவித்தார்.
அந்த நபர் சாலையை பயன்படுத்தும் இதர வாகன ஓட்டுனர்களுக்கு ஆபத்தாக நடந்துகொண்டதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குமூலம் வழங்க வரும்படி சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் பெந்தோங் (Bentong) மாவட்ட குற்றவியல் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்க போலீசார் தொடர்பு கொண்டதாக Zaiham வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.