Latestமலேசியா

கே.எல்.ஐ.ஏ போலீஸ் தலைமையகத்தில் வெளிநாட்டினர் மரணம்

கோலாலம்பூர், நவ 25 – கே.எல்.ஐ ஏ போலீஸ் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 30 வயதுடைய வெளிநாட்டினர் ஒருவர் சனிக்கிழமை மரணம் அடைந்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Hussein Omar Khan தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனிலிருந்து வந்த அந்த ஆடவர் கே.எல.ஐ.ஏ விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட்டிற்கு செல்வதற்கு திட்டமிட்டிந்தார். அவர் மற்ற பயணிகளிடம் முரட்டுத்தனமாக செயல்பட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

கைது நடவடிக்கையின்போது அந்த நபர் போலீசிற்கு சொந்தமான பல்வேறு பொருட்களையும் சேதப்படுத்தியபோது இரண்டு போலீஸ்காரர்கள் மற்றும் ஒரு உதவியாளரையும் காயப்படுத்தியதாக உசேய்ன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அவரது ஆவணங்கள் தொடர்பான தகவல்களை போலீசார் பதிவு செய்து கொண்டிருந்தபோது அந்த கைதி திடீரென மயக்கமுற்று கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடக்கக் கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பின்னர் அந்நபர் இறந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!