
கூலிம், செப்டம்பர்-9 – கெடா, கூலிம் அருகே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள்களைத் திருட Jaguar காரில் சென்ற ஆடவன், ‘துரதிஷ்வசமாக’ விபத்தில் சிக்கியதால் கடைசியில் போலீஸிடம் அகப்பட்டான்.
நேற்று காலை 9.30 மணிக்கு Junjong சாலையோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிளை அக்கார் மோதியது.
இதையடுத்து 36 வயது அந்நபர் கைதான வேளை, உடனிருந்த கூட்டாளி தப்பியோடி விட்டான்.
Jaguar பறிமுதல் செய்யப்பட்ட வேளை, கேபிள் திருட பயன்படுத்தும் உபகரணங்கள், போதைப்பொருள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன.
போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அந்த Jaguar காரும் போலி எண் பதிவு அட்டையைக் கொண்டிருந்தது அம்பலமானது.
சம்பவத்தின் போது அவன் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியான வேளை, அவனுக்கு 9 பழையக் குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்தது.