
இஸ்கண்டார் புத்ரி – ஜூலை-8 – கேலாங் பாத்தாவில் ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு, கார் கதவை உதைத்து ஆபாச சைகை செய்த வாகனமோட்டி கைதுச் செய்யப்பட்டார்.
20 வயது சந்தேக நபர், சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமராசன் தெரிவித்தார்.சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிச் செய்யப்பட்டது.
ஜூலை 10 ஆம் தேதி வரை 4 நாட்கள் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக வைரலான வீடியோவில், பாதிக்கப்பட்டவர் தனது காரில் அமைதியாக அமர்ந்திருப்பதையும், சந்தேக நபர் ஓட்டுநரின் கதவை மீண்டும் மீண்டும் உதைப்பதையும் காண முடிந்தது. சந்தேக நபர் ஒரு மோசமான கை சைகையைக் காட்டுவதும் வீடியோவில் தெரிந்தது.