Latestமலேசியா

கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த 2 உயர்கல்விக் கூட மாணவர்கள் உட்பட மூவருக்கு அபராதம்

கோத்தா பாரு, ஜூலை-21- கிளந்தானில் அண்மையில் ஆண் ஒரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கைதானவர்களில் மூவர், கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்.

அவர்களில் இருவர் உயர் கல்விக் கூட மாணவர்கள் ஆவர்.

இருவருக்கும் கோத்தா பாரு மேஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 4,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

47 வயது மற்றோர் ஆடவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

தவறினால் மூவரும் 6-மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி அறிவித்தார்.

முன்னதாக ஜூன் 16-ஆம் தேதி அங்குள்ள பங்களாவில் நடைபெற்ற LGBT ஒன்றுகூடலில் சுமார் 100 ஆண்கள் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

எனினும் போலீஸ் சோதனைக்குச் சென்ற போது 20 பேர் மட்டுமே அங்கிருந்தனர்.

HIV மருந்து மாத்திரைகளும் நூற்றுக்கணக்கான ஆணுறைகளும் அதன் போது கைப்பற்றப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!