
கோம்பாக், ஜூலை-16-சிலாங்கூர் கோம்பாக்கில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், தனது அண்டை வீட்டின் உள்ளே புகுந்து இரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த அத்தாக்குதலில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட இருவர் காயமடைந்து, சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சந்தேக நபர் நேற்று நண்பகல் கைதுச் செய்யப்பட்டார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சில ஆதாரப் பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அபாயகரமான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கு ஏதுவாக இன்று முதல் அவர் தடுத்து வைக்கப்படுகிறார்.



