
கோலாலம்பூர், ஜூன்-6 – கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் சட்ட விரோதமாக homestay தங்குமிடங்களை நடத்தி வந்த 13 வெளிநாட்டினர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் 1 பெண் உட்பட 10 பேர் வங்காளதேசிகள், ஒருவர் இந்தோனேசிய ஆடவர், தலா ஒருவர் இந்தியா, பிலிப்பின்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இரு வாரங்கள் உளவு பார்த்து, செவ்வாய்க்கிழமையன்று ஜாலான் ஈப்போ மற்றும் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலைகளில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் அவர்கள் சிக்கினர்.
உள்ளுர் வணிகத் தளங்களை வாடகைக்கு எடுத்து, இணைய முன்பதிவு வாயிலாக அவற்றை homestay-யாக அக்கும்பல் நடத்தி வந்துள்ளது.
அறைகளின் அளவு பொருத்து ஒரு நாள் இரவு தங்க 80 முதல் 400 ரிங்கிட் வரையில் இவர்கள் கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.
ஓராண்டாகவே இந்த சட்டவிரோத homestay செயல்பட்டு வந்துள்ளது.
வாடகை ஒப்பந்தப் பத்திரங்கள், வங்காளதேச, இந்திநய மற்றும் இந்தோனேசியக் கடப்பிதழ்கள், 49 அறை நுழைவு அட்டைகள், மடிக்கணினி, கைப்பேசிகள், வருகையாளர் பதிவு, 74,000 ரிங்கிட், 2,160 டாலர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
13 பேரும் மேல் விசாரணைக்காக புத்ராஜெயா குடிநுழைவு தலைமையகம் கொண்டுச் செல்லப்பட்டனர்.