Latestமலேசியா

கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங் லாலாபோர்ட் வணிக வளாகம் புதிய விரைவு பேருந்து சேவை மையமாக உருவாகும் – அந்தோனி லோக்

கோலாலம்பூர், ஜன 21 – போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல பொருத்தமான வணிக வளாகங்களுக்கு அரசாங்கம் பொதுப் போக்குவரத்து மைய உரிமங்களை வழங்கும்.

எதிர்காலத்தில் உரிமம் பெறப்படும் வணிக வளாகங்களில்  Bukit Bintangகில் உள்ள Lalaport அடங்கும், இது நகர மையத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

பெரும்பாலான விரைவுப் பேருந்துகள், குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் இடையே சேவையில் ஈடுபட்டுவரும் விரைவு பேருந்துகள் ,  Berjaya Times Square வணிக வளாகம் மற்றும் சில ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் பயணிகளை இறக்கிவிடுகின்றன.

அவை பொருத்தமற்றவை மற்றும் பாதுகாப்பற்றவை என்று கருதப்படுகிறது.

லாலாபோர்ட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் விரைவு பேருந்து பொதுப் போக்குவரத்து மையம் உண்மையிலேயே சேவைகளை வழங்கத் தயாராகும் வரை எந்த சம்மனும் பிறப்பிக்கப்படாது.

புத்ராஜெயாவில் உள்ள IOI City Mall , 1 Utama மற்றும் Sunway Pyramid போன்ற பல இடங்களையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என அந்தோனி லோக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!