
கோலாலம்பூர், செப் 8- 15 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் மருத்துவமனையில் பிரசவத்தின்போது மருத்துவ அலட்சியத்தால் மீளமுடியாத மூளை பாதிப்புக்குள்ளான 15 வயது சிறுவனுக்கு 2.28 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான இழப்பீடு வழங்கும்படி அரசாங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு இளநிலை மருத்துவ அதிகாரி, மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் அப்போதைய தலைவரின் அலட்சியமான செயல்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டறிந்த பின்னர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையர் கான் தீச்சியோங் ( Gan Techiong ) இந்த தீர்ப்பை வழங்கினார்.
2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி பிறந்த அந்த சிறுவனின் சார்பாக அவனது தாயார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்குள் மருத்துவர்கள் சிசேரியன் செய்யத் தவறியதால், குழந்தைக்கு பெருமூளை வாதம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செயல்முறையில் ஏற்பட்ட தாமதங்கள் மூளை பாதிப்பு இல்லாமல் உயிர்வாழும் நியாயமான வாய்ப்பை அந்த சிறுவன் இழந்ததாக வாதியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
அதே நேரத்தில் நஞ்சுக்கொடி பிரிப்பு விளைவைத் தவிர்க்க முடியாததாக ஆக்கியது என்று பிரதிவாதிகள் கூறினர்.
விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட அந்த சிறுவனின் நிலையை தனது தீர்ப்பில் விவரித்தபோது Gan உணர்ச்சிவசப்பட்டார்.
பொது இழப்பீடுகளாக 300,000 ரிங்கிட், சிறப்பு இழப்பீடுகளாக
458,400 ரிங்கிட் , விசாரணைக்கு முந்தைய இழப்பீடுகளாக 51,300 ரிங்கிட் மற்றும் எதிர்கால பொது இழப்பீடுகளாக 1.47 மில்லியன் ரிங்கிட் ஆகியவற்றை வழங்கும்படி Gan Tehiong தீர்ப்பளித்தார்.
பெரும்பாலான தொகைகளுக்கு ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு வட்டியை வழங்கும்படியும் கான் உத்தரவிட்டார்.