Latestமலேசியா

சட்டப்பூர்வ அனுமதியின்றிஅங்காடிக் கடையில் துப்பாக்கிசூடு நடத்தியதாகபோலீஸ்காரர்மீது குற்றச்சாட்டு

சிரம்பான், செப் 25 –

இந்த மாத தொடக்கத்தில் சட்டப்பூர்வமான காரணமின்றி துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில், இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு போலீஸ் லான்ஸ் கார்ப்ரல் மீது குற்றம் சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நுருல் சகினா ரோஸ்லி முன்னிலையில் 37 வயதான முகமட் இஸ்ஸாத் பித்ரி முகமட் ஹசிமிற்கு ( Mohd izzat fitri Mohd Hashim ) எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை மறுத்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சட்டப்பூர்வமான சரியான காரணம் இன்றி கருப்பு நிற தாரா ஏரோஸ்பேஸ் TM-9C ஆயுதத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டறியப்பட்டது.

செப்டம்பர் 8 ஆம் தேதி, செனாவாங்கில், Bandar Prima Senawang உள்ள ஜாலான் BPS 2 க்கு அருகிலுள்ள ஒரு அங்காடிக் கடையில் அதிகாலை 2.30 மணியளவில் முகமட் இஷாட் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

1960 ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டத்தின் 39 ஆவது விதியின் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் ஒரு ஆண்டு சிறை அல்லது 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம். முகமட் இஷாட்டிற்கு 2,500 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு இந்த குற்றச்சாட்டு மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!