
கங்கார், நவ 19 – கடந்த வாரம் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கங்கரில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் திருடப்பட்ட மின்சார இணைப்புகளைப் பயன்படுத்தி செயல்பட்ட சட்டவிரோத பிட்காயின் சுரங்க கும்பலை போலீசார் முறியடித்தனர். இந்த சோதனையில், 400,000 ரிங்கிட்டுக்கும் மேலான மதிப்புள்ள கணினிகள் உட்பட பல்வேறு பிட்காயின் சுரங்க உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோலா பெர்லிஸ் போலீஸ் நிலையம் , மற்றும் கெடா/பெர்லிஸ் கடல்சார் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட கங்கார் மாவட்ட போலீஸ தலைமையகத்தின் அதிகாரிகளால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
“தெனாகா நேஷனல் பெர்ஹாட் இழப்புகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக்குழு போலீஸ் சோதனைக்கு உதவியதோடு , கோலா பெர்லிஸ் மற்றும் கங்கார் பகுதிகளில் உள்ள TNB விநியோகத்திலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேகத்திற்கிடமான மின்சார பயன்பாடு குறித்த தகவலும் கிடைத்ததாக பெர்லீஸ் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அப்துல் ஹலிம் ( Muhammad Abdul Halim ) தெரிவித்தார்.
கோலா பெர்லீசில் Marina விற்பனை மைத்திலுள்ள ஒரு கடை வீடு , Kangar Jaya , Taman Putra Utama விலுள்ள இரண்டு கடை வீடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கணினி சாதனங்கள் உட்பட பிட்கொய்ன் தயாரிக்கும் 40 இயந்திரங்கள் மற்றும் 421,690 ரிங்கிட் மதிப்புள்ள இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 20 வயதுக்கு மேற்பட்ட ஆடவனும் கைது செய்யப்பட்டதா முகமட் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.
அந்த மூன்று கடைவீடுகளும் பிட் கொய்ன் தயாரிப்புக்கு திருடத்தனமாக மின் விநியோகத்தை பயன்படுத்தியிருப்பதால் தெனாகா நேசலுக்கு மாதந்தோறும்
150,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது .



