Latestமலேசியா

சன்ஷைன் கல்வி குழுமத்தின் இந்தியக் கிளை தொடக்கம்; உலக கல்வி அரங்கில் புதிய அத்தியாயம்

சென்னை, ஜனவரி-14-உலகத் தமிழர்கள் சங்கமித்த அயலகத் தமிழர் தினம் 2026 நிகழ்வு அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தேறியது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இந்த இலக்கிய, வர்த்தக, சமூக ஒருங்கிணைப்பு விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற உலகத் தமிழ் புலம்பெயர் கண்காட்சி 2026-ல், மலேசியாவின் சன்ஷைன் கல்வி குழுமம் தனது இந்தியக் கிளையான Sun Kids International Education Group (India) Private Limited-டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கியது.

தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அயலக துறை அமைச்சர் எஸ். எம். நாசர் அதனை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சன்ஷைன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் Dr ஆர் வி ஷாம்பிரசாத் மற்றும் இணை இயக்குனர் பரமேஸ்வரி சன்ஷைன் கல்வி குழுமம் உலக அரங்கில் ஒரு பிரம்மாண்டமான இடத்தை இதன் மூலம் எட்டியுள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

தங்களின் உலகளாவிய கல்விப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் அற்புதமான மற்றும் மறக்க முடியாத தருணமாக இது அமைந்தாக ஷாம்பிரசாத் குறிப்பிட்டார்.

ஷாம்பிரசாத் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ‘அயலகத்தில் தமிழர்களின் மேன்மை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமைச்சர் பெருமக்கள் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் உலகளாவிய வலிமையையும் ஒற்றுமையையும் பிரதிபலித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!