
கூச்சிங், ஆக 27 – சரவா பிந்துலுவில் 6 வயது சிறுமியை தெரு நாய் கடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட rabies நோயினால் இறந்தாக சரவா மருத்துவ இயக்குநர் டாக்டர் Veronica Lugah உறுதிப்படுத்தினார்.
தனது குடும்பத்துடன் ஒரு பண்ணையில் வசித்த அந்த சிறுமிக்கு ஜூலை 31ஆம்தேதி முதல் பல அறிகுறிகள் தென்படத் தொடங்கின.
அச்சிறுமி தலைவலி, காய்ச்சல், கழுத்து வலி மற்றும் பசியின்மை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டதாக டாக்டர் வெரோனிக்காவை மேற்கோள் காட்டி Borneo Post செய்தி வெளியிட்டது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி அந்த சிறுமி பிந்துலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அச்சிறுமி , aerofobia மற்றும் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்புக்கு உள்ளாகி பின்னர் மறுநாள் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
இந்தோனேசியாவைச சேர்ந்த அச்சிறுமியை வீட்டிற்கு வெளியே தெரு நாய் ஒன்று கடித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் சரவாக் கால்நடை சேவைகள் துறை அந்த நாயை வெற்றிகரமாக பிடித்து அதற்கு rabies இருப்பதை உறுதிப்படுத்தியதாக டாக்டர் வெரோனிக்கா தெரிவித்தார்.