
ஜோகூர் பாரு, அக் 2 – சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டிய ஒருவர் நேற்று அதிகாலை, Masai, Plentong எண்ணெய் நிலையத்தில் மானிய விலையில் RON95 பெட்ரோலை நிரப்பும் வீடியோவில் சிக்கினார்.
அதிகாலை 3.55 மணிக்கு பதிவு செய்யப்பட்ட 21 வினாடிகளைக் கொண்ட வீடியோ கிளிப்பில், வாகனம்
RON95 உடன் லிட்டருக்கு RM2.60 எரிபொருள் நிரப்புவதைக் காட்டியது.
சிங்கப்பூரில், அந்த பெட்ரோலின் விலை லிட்டருக்கு 9 ரிங்கிட் 40 சென் என்ற விலையில் விற்கப்படுகிறது.
இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டின, பயனர்கள் பலவீனமான அமலாக்கத்தை கடுமையாக விமர்சித்ததோடு, குறிப்பாக BudiMadani RON95 (BUDI95) முயற்சி அண்மையில் மலேசியர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டதால் மானிய விலையில் எரிபொருளை தவறாகப் பயன்படுத்துவதை பலர் விமர்சித்தனர்.
இதனிடையே அமலாக்க அதிகாரிகள் விசாரணைக்காக Pelantong, Taman Sierra Perdanaவிலுள்ள எண்ணெய் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநர் Lillis Saslinda Pornoma தெரிவித்தார்.