
சிட்னி, டிசம்பர் 17-ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Bondi கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஈடுபட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சஜித் அக்ரம் (Sajit Akram) என அடையாளம் காணப்பட்ட அந்நபர், இந்தியக் கடப்பிதழ் வைத்திருந்ததும், 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததும் தெரிய வந்துள்ளது.
கடந்த 27 ஆண்டுகளாக சஜித் ஆஸ்திரேலியாவில் தான் வசித்து வந்துள்ளார்.
சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய அதிரடி தாக்குதலில், சஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடனிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய அவரின் 24 வயது மகன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த தாக்குதல் தொடர்பாக கருத்துரைத்த இந்திய போலீஸாரோ, சஜித் குடும்பத்தினரின் தீவிரவாத தொடர்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், இந்தியாவிலிருந்து எந்த பயங்கரவாத தொடர்பும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக Hanukkah விழாவின் போது நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்த நிலையில், இது பயங்கரவாத தாக்குதலாக விசாரிக்கப்பட்டு வருகிறது.



