Latestமலேசியா

சித்தியவானில் வீட்டில் ஏற்பட்ட தீயில் ஆடவர் எரிவதற்கு முன் கொல்லப்பட்டார்; அதிர்ச்சி தகவல்

மஞ்சோங், செப்டம்பர் 25 – இன்று காலையில், சித்தியவான் தாமான் முஹிபா 2-யில், வீடுடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி மாண்ட ஆடவர், முன்னதாக கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அங்கு ஏற்பட்ட தீ விபத்தில், 46 வயதான முஹம்மட் கைருல் ரிட்ஜூவான் முஹமட் தைப் (Muhammad Khairul Ridzuan Muhammad Taib) என்பவர் வீட்டின் வரவேற்பு அறையில் சாய்ந்த நிலையில், கருகிய சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தனக்குத் தெரிந்த ஆடவர் ஒருவர் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டதாக, சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.

அந்த சந்தேக நபர் பின்னர், பெட்ரேல் போன்ற திரவம் கொண்ட இரண்டு கொள்கலன்களுடன் வீட்டை விட்டு வெளியேறுவதையும் கண்டிருக்கிறார்.

அதன்பிறகே, அங்கு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, போலீஸ் சம்பவ இடத்திற்கு அருகிலேயே அச்சந்தேக நபரைக் கைது செய்து, 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

இன்று அதிகாலையில்,நிகழ்ந்த தீ விபத்தில் ஒருவர் கருகி மாண்ட நிலையில், அவ்வீட்டைச் சேர்ந்த இதர எழுவர் காயங்களின்றி உயிர் தப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!