Latestமலேசியா

சிபூ வங்கியில் துப்பாக்கிச் சூடு; தோட்டா கண்டெடுப்பு

சிபூ வங்கியில் துப்பாக்கிச் சூடு; தோட்டா கண்டெடுப்பு

சிபூ, பிப்ரவரி -16,

சரவாக், சிபூவில் வங்கியொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையது என நம்பப்படும் உயிருள்ள ஒரு தோட்டாவும், தோட்டா உறையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆடவர்கள் கைத்துப்பாக்கியால் ஒரு முறை சுட்டு விட்டு தப்பியோடியதாக சாட்சிகள் கூறினர்.

அதில் வங்கியின் கண்ணாடி கதவில் தோட்டா பாய்ந்தது.

எனினும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை; யாரும் காயமடையவுமில்லை.

இதையடுத்து சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!