Latestமலேசியா

சிரம்பான்–நீலாய் சாலையில் தோழி ஓட்டிச் சென்ற காரிலிருந்து குதித்த இளைஞர் மரணம்

நீலாய், பிப் 4 -Taman Kirby க்கு அருகே லாபு , 9 ஆவது மைலில் தனது தோழி ஓட்டிச் சென்ற காரிலிருந்து திடீரென குதித்த இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். திங்கட்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் சிகிச்சைக்காக சிரம்பான் Tuanku Jaafar மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கு முன் சுயநினைவில்லாமல் இருந்த சுமார் 20 வயதுக்குட்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞர் நேற்று நண்பகல் மணி 12.35 அளவில் மருத்துவமனையில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை மணி 11.37 அளவில் உள்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்த நீலாய் மாவட்ட போலீஸ் தலைமையகம் புகாரைப் பெற்றதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ஜொஹாரி யஹ்யா ( Johari Yahya ) தெரிவித்தார்.

நீலாயை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஜாலான் சிரம்பான் – நீலாய் சாலையில் மாலை மணி 3 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கார் ஓட்டுனரான அப்பெண் தெரிவித்தார்.

அந்த இளைஞருடன் தாம் பேசிக்கொண்டே கார் ஓட்டிச் சென்றதாகவும் அவர் திடீரென காரின் கதவை திறந்து வெளியே குதித்ததால் தலை மற்றும் முட்டியில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் இறந்ததாக அப்பெண் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!