
சிரம்பான், டிசம்பர்-10 – இன்று காலை சுமார் 7.53 மணியளவில், பரபரப்பான நேரத்தில் சிரம்பான் ராசா சாலையில் மம்பாவுக்கு செல்லும் வழியில் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்து.
ஓர் இந்தியர், ஒரு மலாய்க்காரர் என இரு ஆடவர்கள் வெள்ளை நிற Perodua Myvi காரில் பயணம் செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
அதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அந்த மலாய்க்கார ஆடவர் மதியம் 12.45 மணியளவில் உயிரிழந்தார்; இந்திய நபர் இன்னமும் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
சம்பவத்தை உறுதிப்படுத்திய போலீஸார், குற்றவியல் சட்டம் மற்றும் 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாகக் கூறினர்.
எனவே, விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் யூகங்கள் எதனையும் எழுப்ப வேண்டாமென பொது மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் இருந்தால் Seremban போலீஸ் தலைமையத்தையோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களையோ தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



