
கோலாலம்பூர், ஏப் 6 – சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியம் மற்றும் சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் மன்றம் தலைமையில் , சிலாங்கூர் மாநில முன்னாள் முப்படை வீரர்கள்
சங்கம் , Legendary Riders Malaysia Club, இணைந்து சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக்கான குறுக்கோட்டப் போட்டி நாளை மறுநாள் மார்ச் 8ஆம் தேதி சனிக்கிழமை பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 99 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.
ஒரு காலத்தில் குறுக்கோட்டப் போட்டி என்றால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தான் முன்னிலையில் இருந்தார்கள்.
ஆனால் காலப்போக்கில் அவர்களின் பங்கேற்பு குறைந்து விட்டது.
எனினும் நமது மாணவச் செல்வங்களை குறுக்கோட்டம் உட்பட ஓட்டப்பந்தய போட்டிகளில் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் முதல் முறையாக சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக குறுக்கோட்டப் போட்டி பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
எனவே இப்போட்டி நமது மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக விளங்கும் என்று போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
இப்போட்டி குறித்த மேல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு கீழ்காணும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.