
கோலாலம்பூர், ஜன 24 – சீனப் புத்தாண்டை முன்னிட்டு வழக்கமான டோல் கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு கழிவை வழங்குவதற்கு அரசாங்கம் இன்று இனக்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ அலெக்ஸன்டர் நந்தா லிங்கி (Datuk Seri Alexander Nanta Linggi) தெரிவித்தார்.
இதன் விளைவினால் ஏற்படும் மொத்தம் 20.08 மில்லியன் ரிங்கிட் இழப்பீடை டோல் கட்டண நிறுவனங்களுக்கு வழங்குவதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் எல்லையிலுள்ள டோல் சவாடியான வடக்கு -தெற்கு நெடுஞ்சாலையின் Bangunan Sultan iskandar Tol கட்டிடம் மற்றும் மலேசிய – சிங்கப்பூர் இரண்டாவது நெடுஞ்சாலையில் Tanjung Kupang டோல் சாவடி ஆகியவற்றைத் தவிர இதர அனைத்து டோல் சாவடிகளிலும் இந்த கட்டண கழிவு அமல்படுத்தப்படும் என அலெக்ஸன்டார் நந்தா லிங்கி கூறினார்.