
சீனாவின் Seedance 2.0 AI வீடியோ தொழில்நுட்பத்தால் கதி கலங்கி நிற்கும் ஹோலிவூட் சினிமா
கலிஃபோர்னியா, பிப்ரவரி-15,
சீனாவின் Seedance 2.0 என்ற புதிய AI வீடியோ தயாரிப்புத் தொழில்நுட்பம், உலகத் திரைப்படத் துறை குறிப்பாக ஹோலிவூட்டையே அதிர வைத்துள்ளது.
வெறும் இரண்டே வரி “prompt” மூலம், இந்த கருவி ஹோலிவூட் நடிகர்களான Tom Cruise மற்றும் Brad Pitt பாலத்தில் சண்டையிடும் 15 வினாடி காட்சியை உருவாக்கியுள்ளது.
மிகவும் தத்ரூபமாக இருக்கும் அதன் நிஜத்தன்மை, இரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதோடு, படைப்பாளிகளை பதற வைத்துள்ளது.
_“இது எங்களுக்கு எழுதப்பட்ட முடிவு”_ என Deadpool & Wolverine படத்தின் எழுத்தாளர் Rhett Reese விரக்தி கலந்த எச்சரிக்கை விடுத்தார்.
இப்படியே போனால் ஹோலிவூட்டே இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என திரையுலகம் விழிபிதுங்கியுள்ளது.
இந்நிலையில்,
அனுமதியில்லாமல் காப்புரிமைப் படைப்புகளை பயன்படுத்தியதாக Seedance‑சின் தாய் நிறுவனமான ByteDance மீது, அமெரிக்காவின் Motion Picture Association குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரம், படத் தயாரிப்பு நிறுவனங்கள் இதில் இருவேறு நிலைபாட்டைக் கொண்டுள்ளதை காண முடிகிறது.
சில நிறுவனங்கள் இந்த AI தொழில்நுட்பத்துடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்க, மற்ற நிறுவனங்களோ கடுமையான சட்டப் பாதுகாப்பை கோருகின்றன.
நிஜ சினிமாவுக்கும் கனவுலகுக்கும் இடையிலான கோட்டினை
AI தொழில்நுட்பம் இப்படி அழித்து வரும் நிலையில், ஹோலிவூட்டின் எதிர்காலம் மீண்டும் எழுதப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…



