Latestமலேசியா

சுகாதார பணியாளர்களின் மருத்துவ நலனுக்கு RM343 மில்லியன் செலவு; நலனை முன்னிறுத்தும் விரிவான அணுகுமுறைக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர், டிசம்பர்-5 – KKM எனப்படும் சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கான மருத்துவ வசதி செலவு கடந்த 5 ஆண்டுகளில்
RM343 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது.

செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாசலம், நேற்று முன்தினம் மேலவையில் கேட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதிலில் இது தெரிய வந்துள்ளது.

2021-ல் வெறும் RM47.37 மில்லியனாக அச்செலவு இருந்துள்ளது.

இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் RM85.02 மில்லியன் செலவாகியுள்ளது.

இந்தச் செலவு பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படும் முக்கிய நலன்களில் ஒன்றாகும்.

ஆனால், பொதுவான விவாதங்கள் சம்பளம் மற்றும் அலவன்ஸ் மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதால், இந்த மருத்துவ நலன் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போவதை லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.

“சம்பளம், அலவன்ஸ் மட்டுமல்ல; பணியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான செலவுகள், அவர்களின் நலனில் மிக முக்கியமான பகுதியாகும்” என்றார் அவர்.

சுகாதார பணியாளர்கள் தான் நாட்டின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பு.

அவர்களது சேவையின் உண்மையான மதிப்பை உணர, சம்பளம் மட்டுமல்லாமல் அனைத்து நலன்களையும் குறிப்பாக மருத்துவ வசதிகளையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்றார் அவர்.

RM343 மில்லியன் செலவென்பது என்பது அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பின் சான்று.

என்றாலும், இவ்விஷயத்தில் விரிவான பார்வை தேவை என அவர் வலியுறுத்ததினார்.

இந்தப் புள்ளிவிவரங்கள் பொது மக்களுக்கும் பணியாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுகாதார பணியாளர்களின் நலன்களை வலுப்படுத்த அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் எனவும் லிங்கேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!