
ஷா அலாம், ஜன 17 – பெரனாங், Sungai Kabul ஆற்று நீர் இளஞ்சிவப்பாகிய சம்பவத்தைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட தொழிற்சாலை கழிவுகள் எதுவும் அந்த ஆற்று நீரில் இல்லையென Span எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் உறுதிப்படுத்தியது. அந்த பிரதான ஆற்றுக்கு அருகில் உள்ள தொழில்துறை பகுதியைச் சுற்றி அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக Span தெரிவித்தது. நீர் விநியோகத்திற்கு குறுக்கீடு ஏற்பட்டபோதிலும் அந்த ஆற்றில் தொழில்துறை கழிவுகள் கொட்டப்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
தொழில்துறை பணியாளர்கள் அதிக திறன் கொண்டவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் மூல நீர் ஆதாரங்களில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என முகநூலில் வெளியிடப்படட பதிவில் Span கேட்டுக்கொண்டது. இதனிடையே , நீர் வளக் குற்றவாளிகளை நீர் மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும்
2006ஆம் ஆண்டு நீர் சேவைகள் தொழில் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த முடியும் என்றும் ஸ்பான் நினைவுறுத்தியுள்ளது.