
சுங்கை பட்டாணி, ஜனவரி 15 – கெடா சுங்கை பட்டாணியில் உள்ள தாமன் ரியா குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய ஒரு நபரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
குவாலா மூடா மாவட்ட காவல் துறை தலைவர் Asisten Komisioner Hanyan கூறுகையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும், திடீரென ஆத்திரத்தில் செயல்பட்டு இந்த சம்பவத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அந்த நபர் இன்று காலை தாமான் ரியா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, ஆயுதமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருளை கையில் வைத்துக் கொண்டு, குடியிருப்பு பகுதியில் உள்ள வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துகளை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



