குவந்தான், செப்டம்பர் 23 – கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய தண்டனை கைதி, தற்போது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளான்.
குவாந்தான் பேருந்து நிலையத்தில் அக்கைதியைக் கைது செய்ததை, மலேசிய சிறைச்சாலை துறை இன்று உறுதிப்படுத்தியது.
சோதனை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வெற்றிகரமாக அந்த கைதியைப் பிடிக்க முடிந்ததாகச் அத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது, அந்த ஆடவன் எவ்வாறு தப்பித்தான் என்பதை விசாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த கைதி தப்பிக்க வழிவகுத்த கடமைகளில் அலட்சியமாக இருந்த நபர்கள் மீது கடுமையாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது, சிறைச்சாலை துறை.