
கோலாலம்பூர், ஜன 8 – சுங்கை பூலோவில் Jalan Industri 9 இல் உள்ள
புரோட்டோன் சேவை நிலையம் மற்றும் வர்ணம் பூசும் பட்டறையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 வாகனங்கள் சேதம் அடைந்தன. தீயை அணைப்பதற்கு அருகேயுள்ள ஐந்து தீயணைப்பு நிலையங்களிலிருந்து 27 தீயணைப்பு வீரர்கள் விரைந்ததாக தீ மற்றும் மீட்புத்துறை தெரிவித்தது. மாலை மணி 6.28 அளவில் தீ
முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுத்தோங், டமன்சாரா, பெட்டாலிங் ஜெயா மற்றும் ரவாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு இயந்திரங்களும் அதற்கான துணை வாகனங்களும் சம்பவம் நடந்த இடத்தில் பணியை மேற்கொண்டன. இந்த தீ விபத்தில் எவரும் காயம் அடையவில்லை.



