Latestமலேசியா

சுங்கை பூலோவில் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp நடத்திய மடானி ரமலான் நிகழ்ச்சி

சுங்கை பூலோ, மார்ச்-16-மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் நாடாளுமன்றத் தொகுதியான சிலாங்கூர், சுங்கை பூலோவில் ‘Perpaduan Ziarah MADANI Ihya Ramadan’ நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.

ரமலான் சந்தைகளைப் பார்வையிட்ட பிறகு அமைச்சர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

கோத்தா டாமான்சாரா, செக்‌ஷன் 7 பல்நோக்கு மண்டபத்தில் சுமார் 3,000 உள்ளூர் மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை, மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp நடத்தியது.

மனிதவள அமைச்சான KESUMA மற்றும் HRD Corp உயரதிகாரிகளுடன் இணைந்து, 700 பேருக்கு bubur lambuk நோன்பு கஞ்சியையும் ரமணன் எடுத்து வழங்கினார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 1,000 ‘Bakul MADANI’ கூடைகளும் வழங்கப்பட்டன.

அதோடு, HRD Corp CSR நிதியிலிருந்து RM20,000 நிதி 3 ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களுக்கும் ஒரு தஃபிஸ் மையத்திற்கும் வழங்கப்பட்டது.

HRD Corp நிர்வாகத் தலைவர் டத்தோ Shamir Aziz, சுங்கை பூலோ அம்னோ தலைவர் டத்தோ Megat Firdouz Megat Junid உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி, ரமலானின் புனிதத்தை உயர்த்துவதோடு, சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நலனைக் கட்டியெழுப்பும் முயற்சியாக அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!