Latestமலேசியா

சுபாங் ஜெயா வர்த்தக மையத்தில் பெண்களின் உடைக்கு கீழ் புகைப்படம் எடுத்த ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், மார்ச் 31- கடந்த சனிக்கிழமை சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், பல பெண் வாடிக்கையாளர்கள் அணிந்திருக்கும் உடைக்கு கீழ் புகைப்படம் எடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவனை போலீஸ் தேடி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மணி 1.16 அளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து தனது துறைக்கு புகார் வந்ததாகக் சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் ( Wan Azlan Wan Mamat ) கூறினார்.

“சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், பெண் வாடிக்கையாளர்களின் உடைகளுக்கு அடியில் ஒரு நபர் கைபேசியைப் பிடித்துக்கொண்டு பதிவு செய்வது அல்லது புகைப்படம் எடுப்பது போன்ற ஒரு வைரல் வீடியோ வைரலாகி வருகிறது.

Yixin Siew என்ற பெயரில் முகநூலிலும் , yixin_0111 என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களையும் சந்தேக நபர்களையும் கண்டறிந்து அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 509 ஆவது பிரிவு, 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் 14 ஆவது பிரிவு , 1998 ஆம் ஆண்டு தகவல் மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!