
கோலாலம்பூர், ஜூலை 19 – மறைந்த சுலு சுல்தானின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு சட்டவிரோத அமலாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தரப்பினர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாரிஸ் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டில் மலேசியா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் சையத், மூன்றாம் தரப்பு வழக்கு நிதியில் வெளிப்படைத்தன்மையை மையமாகக் கொண்ட உலகளாவிய கட்டமைப்பை வலுப்படுத்த மலேசியா தொடர்ந்து முயற்சிகளை தீவிரப்படுத்தும் என்று உறுதியளித்துள்ளார்.
கடந்த ஜூலை 7 ஆம் தேதியன்று, சுலு சுல்தானகத்தின் வாரிசுகள் தாக்கல் செய்த 14.9 பில்லியன் அமெரிக்க டாலர் இறுதி தீர்ப்பை ரத்து செய்வது தொடர்பான வழக்கின் விசாரணைகளை பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒரு நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.
இறையாண்மை கொண்ட நாடுகளை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அமலாக்கத்திலிருந்து தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.