
இஸ்தான்புல், ஜூலை 2- நேற்று, எகிப்தின் கிழக்கு கடற்கரையிலிருக்கும் சூயஸ் வளைகுடாவில் படகொன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து பல உயிர்சேதங்கள் ஏற்பட்ட நிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் காணாமால் போய்விட்டதாக எகிப்தின் பெட்ரோலியம் மற்றும் கனிம வள அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லையென்றும், படகிலிருந்த 21 தொழிலார்களைக் காணவில்லையென்றும் அறியப்படுகின்றது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, அச்சம்பவத்தில் வெற்றிகரமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரைப் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் குறித்து எகிப்திய அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடவில்லை என்று ஊடகங்கள் அறிவித்துள்ளன.