Latestமலேசியா

செத்தியா ஆலாமில் பழக்கடையில் RM200 திருட்டு? ஆடவனைத் தேடும் போலிஸ்

செத்தியா ஆலாமில் பழக்கடையில் RM200 திருட்டு? ஆடவனைத் தேடும் போலிஸ்

ஷா ஆலாம், பிப்ரவரி-16,

சிலாங்கூர் செத்தியா ஆலாமில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பழக்கடையின் கல்லாப்பெட்டியிலிருந்து பணம் திருடிய ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை 8.18 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கருப்பு உடை, தொப்பி, சுவாசக்கவசம், கையுறைகள் அணிந்திருந்த சந்தேக நபர், கடைப் பணியாளராக நடித்து குப்பையை வெளியேற்றிய பின், கல்லாப்பெட்டியை உடைத்து 200 ரிங்கிட் பணத்தை எடுத்து தப்பிச் சென்றது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

அன்று மாலை பழக்கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்த நிலையில், CCTV ஆதாரத்தைக் கொண்டு விசாரணைத் தொடங்கியுள்ளது.

தகவல் தெரிந்தோர் ஷா ஆலாம் போலீஸை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!