Latestமலேசியா

செப்பூத்தே எம்.பி. திரேசா கோக் கார் உடைக்கப்பட்டது; RM2,000 பணம், ஆவணங்கள் திருட்டு

கோலாலாம்பூர், பிப்ரவரி-24-செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கின் கார், நேற்று மாலை புக்கிட் கியாரா பூங்காவில் உடைக்கப்பட்டு, பொருட்கள் களவுப் போயின.

மாலை 6.15 மணிக்கு நடைப்பயணம் சென்ற அவர், 7 மணிக்கு திரும்பியபோது, காரின் முன் இருக்கை கண்ணாடி உடைக்கப்பட்டு, கைப்பை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

அவரது கைப்பையில் சுமார் RM2,000 பணம், ‘அங் பாவ்’ அன்பளிப்புப் பணம், அடையாள அட்டை, கடன் பற்று அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக அவர் கூறினார்.

உடனடியாக போலீசில் புகார் அளிக்க, பின்னர் வாகனத்தை விசாரணை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்பகுதியில் அடிக்கடி இத்தகைய திருட்டுகள் நடப்பதாகக் கூறிய திரேசா, கோலாலால்ம்பூர் மாநகர மன்றம் CCTV கேமராக்களை நிறுவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!