
Dass – NEWS 7
கிள்ளான், நவம்பர்-2,
மலேசியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனை மையமான GM Klang Wholesale City, நவம்பர் 1 முதல், அதன் சேவை நேரத்தை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.
கிள்ளான் அரச மாநகர மன்றமான MBDK மேயர் Datuk Abd Hamid Hussain நேற்று இதனை தொடக்கி வைத்தார்.
GM Klang நிர்வாக இயக்குனர் டத்தோ Lim Seng Kok மற்றும் Tourism Selangor தலைமை செயல் அதிகாரி Chua Yee Ling முன்னிலையில் இந்த தொடக்க விழா நடைபெற்றது.
இதுநாள் வரை, GM Klang வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 8 மணி வரையிலும் செயல்பட்டு வந்தது.
வாடிக்கையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வியூகப் பங்காளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Lim Seng Kok கூறினார்.
இப்புதிய சேவை நேரத்தை கொண்டாடும் வகையில் GM Klang இரவு 7 மணி முதல் மகத்தான பிரத்யேக விலைத் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தவிர, மாதாந்திர இரவு நேர அதிர்ஷ்ட குலுக்கும் உண்டு; அதில் ஷாப்பிங் செய்து மோட்டார் சைக்கிள்கள், சலவை இயந்திரங்கள், dryers எனும் உலர்த்திகள் மற்றும் 55 அங்குல விவேகத் தொலைக்காட்சிகளையும் நீங்கள் வெல்லலாம்.
அதோடு Rioooh Malam Sabtu என்ற அட்டகாசமான சனிக்கிழமை இரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனித்துவமான அனுபவங்களையும் வார இறுதி பொழுதுபோக்குகளையும் இந்த வாராந்திர நிகழ்வு வழங்குகிறது.



