Latestஉலகம்

ஜனவரி 1 முதல் பழைய விவேகக் கைப்பேசிகளில் WhatsApp இயங்காது!

நியூ யோர்க், டிசம்பர்-31, புத்தாண்டு தொடங்கி குறிப்பிட்ட சில வகை விவேகக் கைப்பேசிகளில் WhatsApp செயலியைப் பயன்படுத்த முடியாது.

ஆண்ட்ராய்ட் கிட்கேட் அல்லது அதற்கும் பழைய OS இயங்குத்தளம் கொண்ட விவேகக் கைப்பேசிகளில் ஜனவரி 1 முதல் WhatsApp இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

செயலி தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதையும், அதிநவீன சாதனங்களில் மேலும் சீராக இயங்குவதையும் இந்நடவடிக்கை உறுதிச் செய்யும்.

பாதிக்கப்படவுள்ள ஆண்ட்ராயிட் கைப்பேசிகளில் Samsung, Motorola, HTC, LG, Sony உள்ளிட்டவையும் அடங்கும்.

ஆண்ட்ராய்ட் கிட்கேட் பயன்படுத்துவோருக்கு, சில சாதனங்களை இன்னமும் புதிய இயக்க முறைக்கு புதுப்பிக்க வாய்ப்பிருக்கக் கூடும்.

ஆனால், சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ புதுப்பிப்பைப் பெற முடியாத பழைய வகைக் கைப்பேசிகளால், இனி WhatsApp-பைப் பயன்படுத்த முடியாது.

ஒருவேளை சொந்தமாக settings-சை மாற்றியமைத்தால், வாய்ப்புண்டு, ஆனால் கைப்பேசி கெட்டுப் போய் விடுமென அந்நிறுவனம் நினைவுறுத்தியது.

இவ்வேளையில், Apple சாதனங்களும் இதில் விதி விலக்கல்ல; அடுத்தாண்டு மே 5-ஆம் தேதி முதல், 15.1-ரை விட பழைமையான iOS இயங்கு தளத்தில் WhatsApp வேலை செய்யாது.

அவ்வகையில், நடப்பில் 12.5.7 iOS வரை மட்டுமே புதுப்பிக்க முடியும் iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus பயனர்கள், WhatsApp Business வசதி உள்ளிட்ட அச்செயலியின் சேவையைப் பெற முடியாது.

எனவே, பயனீட்டாளர்கள் WhatsApp செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், தங்களது தொடர்பு சாதனங்களை upgrade செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!